திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், தமிழக அணி 159 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் சார்பில், 17வது தேசிய ஜுனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 25 மாநிலங்களை சார்ந்த 950 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 14 வயதுக்கு மேல் 20 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்போட்டிகளில், ஓட்டப் பந்தயம், குண்டுடெறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 46 வகையான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழக அணி, 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் என, மொத்தம் 22 பதக்கங்களை கைப்பற்றி, 159 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.