நேஷனல் ஹெரால்டு முறைகேடு விவகாரத்தில் 64 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சட்ட விரோதமாக கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 64 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.