விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார தரக்கட்டுப்பாடு அலுவலர்கள்,மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

தேசிய சுகாதார தரக்கட்டுப்பாட்டு துறையை சார்ந்த அலுவலர்கள் சாதனாசிங் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் மருத்துவனையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்தியாவில் முன்னேற துடிக்கும் 115 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மாவட்டங்களில் சுகாதாரதம் மற்றும் ஊட்டசத்து வளர்ச்சிக்கென 30 சதவீத முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் உள்ள ஆண்கள் பொதுப்பிரிவு, பெண்கள் பொதுப்பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version