கன்னியாகுமரியில் 148 அடி உயரத்தில் தேசியக் கொடி கம்பம் அமையவுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் ராகேஷ் குமார் சிங் மற்றும், அதிமுக மாநிலங்களைவை உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர், தேசிய கொடி கம்பம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரியில், 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 148 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நாட்டி, அதில் தேசிய கொடியை பறக்கவிட திட்டம் தீட்டி அந்த திட்டத்தை, மாநிலங்களைவை உறுப்பினர் விஜயகுமார் மத்திய அரசிடம் பரிசீலணைக்கு அனுப்பி வைத்தார். இதன் படி, கொடி கம்பம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, இந்த ஆய்வு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வழங்கிய பின் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.