உயர் தர கல்வியை வழங்க தேசிய கல்வி கொள்கை உருவாக்கம்

சட்டப்படி நியாயமான முறையில் சம்பாதிக்கும் பணத்தில் சமூகப் பணிக்கும் செலவு செய்ய வேண்டுமென துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், உயர் தர கல்வியை வழங்க தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தொடக்க கல்வி தாய்மொழி கல்வியாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், மற்ற மொழிகள் அடுத்தபடியாகவே அமைய வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உணவு பழக்கம் குறித்து கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்கள் நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும் எனவும், அப்படி சம்பாதித்த பணத்தில் சமூகப் பணிக்கும் செலவிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version