சில்லரை வர்த்தகத்துக்கான தேசிய வரைவு கொள்கை இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சகமானது, தேசிய சில்லரை வர்த்தக கொள்கை தொடர்பாக வர்த்தக சங்கங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. கூட்டத்திற்கு பின்னர் தொழில் மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அபிஷேக் செய்தியாளர்களை சந்தித்த போது, தேசிய சில்லரை வர்த்தக கொள்கைக்கான வரைவு அடுத்த 10 நாளில் வெளியிடப்படும் என்றும், இதுதொடர்பாக வர்த்தக அமைப்புகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார். இந்தியாவில் சுமார் 46 லட்சம் கோடி அளவுக்கு சில்லரை வர்த்தகம் நடைபெறுகிறது என்றும் சில்லரை வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக இந்த தேசிய கொள்கை இயற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார். சில்லரை வர்த்தகத்தை முழுமையாக கணினி மயமாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், இதற்காக வர்த்தகர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது என்றும் அபிஷேக் கூறினார்.