கனமழை எச்சரிக்கையை அடுத்து, 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளதாக அமைச்சார் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என தெரிவித்தார். இதனால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறினார். கஜா புயலில் கிடைத்த அனுபவத்தை வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.