வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்

ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர்.

ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டம் பூலவரம் அணைப் பகுதியில் இருந்து தவலேஸ்வரம் பகுதிக்கு 18 படகுகளில் 37 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் மையப் பகுதியில் அவர்கள் சிக்கி தவித்தனர். இதனை கண்ட கரையோர மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட துணை ஆட்சியர் வேணுகோபால் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மீனவர்களை இந்திய கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Exit mobile version