2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ”அசுரன்” தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் பெற்றார்.
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு “அசுரன்” தேர்வு
அசுரன் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது “விஸ்வாசம்” படத்திற்காக டி.இமானுக்கு வழங்கப்படுகிறது
சிறந்த துணை நடிகருக்கான விருது “சூப்பர் டீலக்ஸ்” படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது
பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது; ரசூல் பூக்குட்டி-க்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது
தமிழில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக கருப்பதுரை படத்தில் நடித்த நாகவிஷால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த துணை நடிகருக்கான விருது ”சூப்பர் டீலக்ஸ்” படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருதும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது ரசூல் பூக்குட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ”விஸ்வாசம்” படத்திற்காக டி.இமானுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் சிறந்த நடிகர் விருதுக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சிறந்த நடிகை விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.