சாலிகிராமத்தில் தேசிய அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி

தேசிய அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. நாணயம் என்பது ஒரு நாட்டின் அடையாளம்… கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், கோயில் கோபுரங்கள் ஆகியவை ஒரு நாட்டின் வரலாற்றை தாங்கியிருந்தாலும், சின்ன உலோகத்திலான நாணயத்தின் மூலம் தெள்ளத் தெளிவான உண்மை வரலாற்றை எளிதில் கண்டறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் பழங்கால நாணய கண்காட்சி, சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்று வருகிறது. 25 ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

Exit mobile version