குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் சாதனைகளை புரிந்துவரும் ராமநாதபுரத்தை சேர்ந்த +1 மாணவி ஷர்மிளா அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன்நகரை சேர்ந்த ராணுவ வீரர் முருகானந்தத்தின் மகள் ஷர்மிளா, தேசிய அளவில் குண்டு எறிதல் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்று இவர் பதக்கங்களை குவித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாரதி விளையாட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 61வது குடியரசு தின தடகளப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநில அளவிலான இந்தப் போட்டியில் பெண்களுக்கான 17 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஷர்மிளா சாதனை புரிந்துள்ளார்.
இதேபோல, இவர் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பெற்றார்.
இதேபோல மேலும் பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய லட்சியம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.