பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் குறித்து நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 23 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்கட்சிகள் கூறிவருகின்றன.இந்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் குறித்து இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். நிறுவனம் இணைந்து நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன.

இதில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 7 சதவிதம் பேரும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருக்கு 5 சதவிகிதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 3 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மோடி ஆட்சியின் மூலம் நாட்டிற்கு நன்மை விளைந்ததா என்ற கேள்விக்கு 46 சதவிகிதம் பேர் ஆம் என்றும் 34 சதவிகிதம் பேர் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version