புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து, மான் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில், இம்மாதத்துக்கான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்கள் உயிரிழப்பு பற்றி நினைவு கூர்ந்தார். பின் அவர், புல்வாமா தாக்குதலால், நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளதாகவும், வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், கடந்த 5 மாதங்களில், 12 லட்சம் ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்றும், மருத்துவ வசதி பெற முடியாத ஏழைகளுக்கு, இந்த திட்டத்தை பற்றி தெரியப்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.