திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் விழாவை முன்னிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு சந்தன கருப்பு சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. இதனையடுத்து தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். 15 நாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள் வரும் பத்தாம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.