விக்ரம் லேண்டருக்கு ஹலோ தகவலை அனுப்பும் நாசா விஞ்ஞானிகள்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருக்கு ஹலோ என தகவலை அனுப்பும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரின் சமிக்ஞைகளைப் பெற முயற்சி மேற்கொண்டு தங்கள் விண்ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூலமாக அதற்கு ஹலோ என தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலையில் விக்ரம் லேண்டரிடமிருந்து 14 நாட்கள் வரை சமிக்ஞைகள் பெற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

லேண்டருக்கு சிக்னல் அனுப்பப்படும் போது நிலவு ஒரு வானொலி அலைவரிசையைப் போல் சிறிய அளவிலான சிக்னலை திருப்பி அனுப்புகிறது. நாசாவின் JPL, DSN நிலையங்கள் கலிபோர்னியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களின் உதவியுடன் நாசா இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது. பூமிக்கும் நிலவுக்குமான சரியான தூரத்தை கணிக்க நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் ஒன்று விக்ரமுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இதில் நாசா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

Exit mobile version