நிரவ் மோடியின் ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

வங்கி மோசடி புகாரில் சிக்கிய நிரவ் மோடியின் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிக் கிளைகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

வங்கி மோசடி தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே வங்கி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிரவ் மோடிக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்தநிலையில், துபாயில் நிரவ் மோடிக்குச் சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Exit mobile version