பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 182 பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை டெல்லியில் வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலும், பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
மதுரா தொகுதியில் ஹேமா மாலினியும், அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியும், நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியும் போட்டியிடுகின்றனர். ஷிமோகாவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.