மகத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் நரேந்திர மோடி அஞ்சலி

நரேந்திர மோடி 2வது முறையாக இன்று மாலை பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், மகத்மா காந்தி, வாஜ்பாய், போர் வீரர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

17வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, நரேந்திர மோடி 2வது முறையாக இன்று மாலை பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், காலை 7 மணிக்கு மகத்மா காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர், போரில் உயிர்நீத்த ராணுவ வீரார்களின் தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற மோடி, அங்கு மரியாதை செலுத்தினர். அவருடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

Exit mobile version