இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்பு

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்

17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக்கு தலைமை வகித்த பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக, நாளை நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவர்களை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version