2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள யோன்சி பல்கலைக்கழகத்தில், மகாத்மா காந்தி, அன்னை தெரசா சிலைகளை, பிரதமர் நரேந்திர மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய பிரதமர், பயங்கரவாதம், பருவநிலை மாற்ற அச்சுறுத்தலில் இருந்து காக்க, மகாத்மா காந்தியின் சிந்தனைகளே சக்தியளிக்கின்றன என்று கூறினார். இதைத் தொடர்ந்து, இந்தியா-தென்கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.