நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி அரசின் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி காலம் தாழ்த்தி வருவதாக கூறி துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தார். ஆனால் நாராயணசாமி சில நிபந்தனைகளை முன் வைத்ததால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இந்தநிலையில், நிபந்தனைகளை ஏற்ற கிரண்பேடி, இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்தார். அதன்படி முதலமைச்சர் நாராணயசாமி அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்தார். நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 39 கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையின் போது விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post