புதுச்சேரியில் ஊரடங்கிற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மதுக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Exit mobile version