அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் அதிமுகவிற்கு 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளது. இந்தநிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் மேட்டூர் நகர் கழகச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version