ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவை , கோபிசெட்டிபாளையம், புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இப்பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை மற்றும் வணிகவளாக கட்டிடங்கள் பழுது போன்ற காரணங்களால் புதிய பேருந்து நிலையம் கட்ட அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்தில் முழுமையடையும் என்றும் இதன்மூலம் 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலனடைவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.