நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு உதவியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 847மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மேற்கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 661 மண்டலங்களிலும் தலா ஒன்று வீதம் 661 சக்கர நாற்காலி வைக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டதிற்கு150 சக்கர நாற்காலிகள் வந்துள்ளன. இவற்றை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீதமுள்ளவை வரப்பெற்றவுடன்,ஓரிரு நாள்களில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.