வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சிறையில் சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. நளினியின் தற்கொலை முயற்சியை விரைவாக சிறை காவலர்கள் தடுத்ததால் அசம்பாவிதம் இன்றி நளினி பாதுகாப்பாக சிறையில் உள்ளதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

Exit mobile version