மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்த நளினி, வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளியன்று காலை 11.30 மணி அளவில் வேலூர் ரங்காபுரம் இல்லத்தில் இருந்து அருகில் உள்ள சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு வந்த நளினி, ஆய்வாளர் அழகுராணி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்.