ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார் நளினி

வேலூர் சிறையிலிருக்கும் நளினி இன்று பரோலில் வெளியே வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தனது மகளின் திருமணத்துக்காக, ஆறு மாதம் பரோல் கேட்டு, நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அவருக்கு ஒரு மாத கால பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நளினிக்கு ஜாமின் வழங்கியவர்கள் மற்றும் நளினி தங்க உள்ள இடங்கள் குறித்த விபரங்களை, அவரது வழக்கறிஞர் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து இன்று பரோலில் சிறையில் இருந்து வெளியே வருகிறார் நளினி.

Exit mobile version