பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நாக்பூர் காவல்துறை

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெண்கள் பயணம் செய்ய இலவச திட்டத்தை நாக்பூர் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் காவல்துறைகளில் நாக்பூர் காவல்துறை சற்று வித்தியாசமானது. அவ்வப்போது அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் ட்விட்கள் பெரும் வரவேற்பை பெறும். இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலவச திட்டத்தை அறிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை எப்போது வேண்டுமானாலும் இரவு நேரமாக வீடு திரும்புவதற்கு தனியாகவும், தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழி தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அதன்படி பெண்கள் காவல்துறையின் இலவச ஹெல்ப்லைன் எண்ணான 1091 ஐ டயல் செய்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று ஒரு பெண் காவலருடன் ஓட்டுநர் வந்து பயணிகளை பாதுகாப்பாக விடுவிப்பார்.

Exit mobile version