கரையைக் கடந்த கஜா புயலால் நிலைகுலைந்த நாகை மாவட்டம் -முழு வீச்சில் சீரமைப்பு பணிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல், நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு கரையைக் கடந்தது. புயலின் கடைசி பகுதி நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்து உள்ளது. நாகையில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மாவட்டம் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நாகை ரயில் நிலையம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பலத்த காற்றால் பேனர்கள், மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரமும், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீட்பு பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையில் சரிந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இதனிடையே, கரையை கடந்துள்ள கஜா புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version