ராஜபாளையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

ராஜபாளையத்தில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ரயில்வே பார்டர் சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் லாரி மற்றும் பேருந்து பயணச்சீட்டு புக்கிங் செய்யும் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். விபத்தில் கடையில் இருந்த விஜயகுமார், இன்பமணி, சரவணன் , வீரபாண்டிய ஆகிய நான்குபேர் காயமடைந்தனர். தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version