ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி அருகே, பேக்கரி கடையின் உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, கதிர்காமு என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு 10 மணிக்கு, அங்கிருந்த இளைஞர் ஒருவருக்கும், கதிர்காமுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த இளைஞர் தனது நண்பர்களோடு பேக்கரிக்கு வந்து, கடையின் உரிமையாளர் கதிர்காமுவை வெளியே இழுத்து தாக்கியுள்ளனர். கதிர்காமுவை தாக்கும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, கதிர்காமு கவுந்தபாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தலைமறைவாகியுள்ள 10 பேரை தேடி வருகின்றனர்.