புதுச்சேரி ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது வீட்டில் இருந்து பயங்கர வெடி சப்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையெடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், குருமூர்த்தியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவரது மனைவி பலத்த காயத்துடன் இருந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் குருமூர்த்தி நகை கடை வைத்துள்ளதால் மூல பொருட்கள் ஏதேனும் வீட்டில் வைத்திருந்து வெடித்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் வீட்டில் மர்ம பொருள் வெடித்து விபத்து!
