தொழிற்சாலைக் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் மர்ம நபர்கள் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள ஆளுங்கட்சியினர், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் குளம் மற்றும் ஏரிக்கரைகளில் கொட்டி தீட்டு எரிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் மாசடைந்து வருவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விடியா திமுக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version