சங்கராபுரம் அருகே காட்டுப்பகுதியில் பெண் கொல்லப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த அஞ்சலை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுக் கடைக்குச் சென்றார். அஞ்சலை வீடு திரும்பாததால் அவரது கணவர் பெருமாள் பல இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அஞ்சலை சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டுக் கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.