ஆந்திராவில், வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரில் பரவிய மர்மநோயால், 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எலூரு நகரில் இருந்து, நீர், ரத்தம், உணவு மாதிரிகளை சேகரித்து ஹைதராபாத் ஊட்டச்சத்து நிறுவன வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும், காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் நோய்க்கு காரணம் என தெரியவந்தது.