நித்தியானந்தா ஆசிரமத்தில் தொடரும் மர்மங்கள்

கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகள் நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படும் சாமியார் நித்தியானந்தாவை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திரைப்படத்தில் வருவது போல விதவிதமாக உடையணிந்து கொண்டு பழைய விட்டலாச்சாரி படத்தில் வருவது போல கைகளில் இருந்து சக்தி வருவது போன்ற கிராபிக்ஸ் உருவாக்கி அதற்க்கு பின்னணியில் பாடலை போட்டு தான் ஒரு கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலா வரும் மாடர்ன் மேஜிக் கிராபிக்ஸ் சாமியார் தான் நித்தியந்தா.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற் பெயர் ராஜசேகர்… கொஞ்சம் பேச்சு திறமையை வைத்து கொண்டு ஆன்மீக கருத்துக்களை சொல்லும் இவரிடம் தமிழகம் மட்டுமில்லாது பல நாடுகளை சேர்ந்த பக்தர்களும் வந்து விழுந்தனர்.

35 வயதிற்குளாகவே 1000 கோடி ருபாய் அளவிற்கு சொத்தை வைத்துக்கொண்டு பல மடங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் சவால்விடும் ஒரு நபராக மாறினார்…இந்த நிலையில் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின…மக்கள் நித்தியானந்தாவை வெறுக்க ஆரம்பித்தனர். நித்தியானந்தாவின் ஆசிரமங்களை அடித்து நொறுக்குவது காவல்நிலையங்களில் நித்தியானந்தா மீது புகார் கொடுப்பது போன்ற செயல்களில் மக்கள் இறங்க ஆரம்பித்தனர்.

இதன் பிறகு தான் ஒவ்வொரு சர்ச்சையாக வெளிவர ஆரம்பித்தது. மேலும் நித்தியானந்தாவின் பெண் சீடர் ஒருவர் நிதியானதா மீது பாலியல் புகார் கொடுத்தார்… ஒவ்வொரு சீடர்களாக நிதியானதாவால் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல ஆரம்பித்தனர். இருப்பினும் இதனையெல்லாம் கண்டுகொள்ளாத நித்தியானந்தா அறிவியலையும் விட்டுவைக்கவில்லை.. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் சொன்ன அறிவியல் கோட்பாடு e=mc2 க்கு நித்தி ஒரு புது விளக்கத்தை கொடுப்பதில் ஆரம்பித்து…

விலங்குகளை தான் பேசவைப்பதாகவும் சூரியனே தன்னை கேட்டு தான் உதிக்கின்றது என்பது வரை நிதியின் அறிவியல் காமெடி வரை இவர் ஒரு சரியான காமடி பீஸ் போல வெளி உலகிற்கு காட்டியது…

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கனடா நாட்டை சேர்ந்த வெளிநாட்டு சீடர் ஒருவர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி நித்தியானந்தா மீது பாலியல் புகார் உட்பட பல புகார்களை அடுக்கடுக்காக கூறியிருந்தார். அந்த புகாரில் தன்னை நிர்வாணமாக படம் எடுத்து வாட்சப்பில் அனுப்ப சொல்கிறார் என்றும் பல பெண்ணைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று கூறியிருந்தார்.

கடந்த வாரம் தனது 2 மகள்களை காணவில்லை என்று ஜனார்தன ஷர்மா என்பவர் நித்தியானந்தா மீது குஜராத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அகமதாபாத் ஆசிரமத்தில் காவல்துறையினர் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி அங்கிருக்கும் சிறுமிகளை மீட்டனர். நித்தியானந்தாவுக்கு எதிராக இவ்வளவு பிரச்சனைகள் நடந்தபோதும் எந்த சலனமும் படாமல் வெளி நாடுகளில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தா சமூக வலைத்தளங்களில் தனது வீடியோவை பதிவிட தயங்கவில்லை.

தற்போது நித்தியானந்தாவின் மீது சுமத்தப்பட்ட பழைய சர்ச்சை ஒன்று இன்று புதிய விஷ்வரூபம் எடுத்துள்ளது…

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன் – ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா. இவர் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010-ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிழந்தார். அதற்க்கு ஆசிரம தரப்பில் மாரடைப்பால் சங்கீத உயிரிழந்ததாக கூறினாலும் சங்கீதாவின் தாய் நிச்சயம் இது கொலை என்று கூறுகிறார். அதற்க்காக தற்போது அவர் சி.பி.ஐ விசாரணை நாடப்போவதாகவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொல்லு-க்கு ஏற்ப இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான நித்தியானந்த ஒரு நாள் அகப்பட்டு சிறை செல்வது உறுதி என்று கூறுகின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

Exit mobile version