தொடர் விடுமுறை காரணமாகக் கர்நாடகத்தின் மைசூர் தசரா பொருட்காட்சியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
மைசூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவையொட்டி, மைசூரில் உள்ள தசரா மைதானத்தில் கர்நாடக அரசு சார்பாக தசரா பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், தற்போது தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்காட்சியில் அலங்கரிக்கப்பட்ட பொருட்கள், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட வன விலங்குகள், மைசூரு அரண்மனை, கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்கள் போன்றவை உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவற்றை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பொருட்காட்சியை பார்த்து செல்கின்றனர்.