கோடிக்கணக்கான ரசிகர்களின் பேராதரவுடன் தொடங்கிய 12வது ஐபிஎல் திருவிழா ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும், எதிர்பாராத சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காமல் எகிறியடித்து கொண்டிருக்கிறது.
அதிலும் அதிகமான ரசிகர் படையை கொண்டுள்ள சென்னை அணி போட்டியில் பங்கேற்றால் எதிரணிகளுக்கு கொஞ்சம் பயம் தான். அது தோல்வி பயம் அல்ல. ” தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு” ரேஞ்சுக்கு போட்டி முடிந்தப் பின் சென்னை அணியில் விளையாடும் ஹர்பஜன் சிங் போடும் தமிழ் ட்வீட்களுக்குத்தான். தமிழ்நாட்டுல பிறந்தவன் கூட இப்படியெல்லாம் ட்வீட் தட்டமாட்டான். அப்படி ஸ்டேட்டஸ் போடுவாரு இந்த பாஜி சிங்.
தற்போது அவர் அடுத்த ரேஞ்சுக்கு முன்னேறிவிட்டார். தமிழக மக்களுக்காக, சென்னை அணியின் ரசிகர்களுக்காக அவர் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பாடல் பற்றி ” இது சும்மா ட்ரைலர் தான்மா….இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே…” ன்னு தமிழில் பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் முழுப்பாடல் ஒன்றை பாடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் தமிழ்ப்பற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர் பாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம்,அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு.இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே.நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல @ChennaiIPL #Yellove கேளு கேளு இது கானா பாட்டு pic.twitter.com/n1utRfltns
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 29, 2019