பொன்னமராவதி அருகே முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

பொன்னமராவதி அருகே கோயில் திருவிழாவையொட்டி, நடந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் முத்துமாரியம்மன் கோயிலின் வைகாசி திருவிழா காப்பு கட்டும் விழா உடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் மண்டகப்படிதாரர்களால் சாமி வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் காரையூர், பொன்னமராவதி சுற்றுவட்டார பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

Exit mobile version