மதுரை சிறையில் இருந்த காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 10 பேர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் 6 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version