முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் ஏராளமான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். தசரா திருவிழா தொடங்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் மாலையை கழற்றியும், காணிக்கை செலுத்தியும் நேர்த்திகடனை நிறைவு செய்தனர். இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version