அதிமுக சார்பில் போட்டியிட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நாளை பதவியேற்கின்றனர்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.க்களாக நாளை பதவியேற்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் காலை பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வெற்றி பெற்ற இருவருக்கும் சபாநாயகர் தனபால், பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.