3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தலையொட்டி அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில தலைமை செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சொந்த ஊரில் பணிபுரிபவர்களையும் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Exit mobile version