இசையின் ஒலிதான் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜூன் 2ம் தேதி நடைபெறும் இசை நிகழ்ச்சியில், பின்னணி இசை அமைப்பது எப்படி என்பதை ஹெங்கேரி நாட்டைச் சேர்ந்த 100 இசைக்கலைஞர்களுடன் மேடையில் செய்து காட்டவுள்ளதாகவும் இளையராஜா தெரிவித்தார்