மாணவர்களின் கல்விதரம் மேம்பட இசை ஒரு உந்து சக்தி எனவும், குழந்தைகளை உற்சாகப்படுத்தினாலே அவர்கள் வாழ்வில் வெற்றிபெற்றுவிடுவார்கள் எனவும் இசைமாமணி எம்.எஸ்.மார்டின் கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் ராகமிருதம் என்ற கீபோர்ட் இசை சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரை இசை, கர்நாடக இசை இந்துஸ்தானிய இசைப்பாடல்களை மாணவ மாணவிகள் கீபோர்டு மூலம் இசைத்தது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் சசிகிரண், கர்நாடக சங்கீத வித்வான் வி.வி. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இசைமாமணி எம்.எஸ்.மார்டின், இன்றைய மாணவர்களை கண்காணித்து அவர்களை உற்சாகப்படுத்தினாலே, அவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவார்கள் என்று கூறினார்.