குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூம்பாறையில், குழந்தைவேலப்பர் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் திருக்கோவில். பழனி தண்டாயுதபாணி கோவிலின் உபகோயிலாக உள்ள இக்கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த இக்கோவிலின் திருவிழாவில் தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்தும், தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரினை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.

Exit mobile version