கரூர் அருகே சமூக ஆர்வலர் மற்றும் அவரது மகன் கொலை வழக்கில் 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வீரமலை என்பவர் 40 ஏக்கர் ஏரியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 40 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்தநிலையில், வீரமலையும், அவரது மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர்களை சுற்றி வளைத்த ஆறு பேர் கொண்ட கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இந்நிலையில் கொலைசம்பவத்தில் தொடர்புடைய பெருமாள் ,சௌந்திரராஜன், பிரபாகாரன், கவியரசன், சண்முகம், சசிகுமார் மற்றும் ஸ்டாலின் ஆகிய 6பேரும் மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.