கோவையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கோவையில், கடந்த 24ம் தேதி மாயமான 7 வயது சிறுமியை, மறுநாள் சடலமாக மீட்டனர். இதையடுத்து நடைபெற்ற மருத்துவ சோதனையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில், கொலையாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு, சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், துப்பு கொடுப்பவர்களின் விவரங்கள், ரகசியமான வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.