10 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில், சிறுவனின் சித்தப்பாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள காட்டு எடையார் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கும், அவருடைய தம்பி பாண்டியன் என்பவருக்கும் இடையே கிணற்றில் தண்ணீர் பகிர்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பாண்டியன் தனது அண்ணன் மகன் சந்தோஷை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் பாண்டியனை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொடூரமாக கொலை செய்த பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.